search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கையின் திருமணத்திற்காக ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொள்ளையன் கைது: பரபரப்பு வாக்குமூலம்
    X

    தனியார் ஏ.டி.எம். மெஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    தங்கையின் திருமணத்திற்காக ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொள்ளையன் கைது: பரபரப்பு வாக்குமூலம்

    • அங்கிருந்த சிசிடிவி மற்றும் மின்சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துவிட்டு தப்பிவிட்டார்.
    • வங்கி ஏடிஎம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் (கரூர் வைஸ்யா) வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு கடந்த 25-ந் தேதி அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர், வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கி அதிலிருந்து பணத்தை திருட முயற்சித்தார். இயந்திரத்தை முழுமையாக உடைத்து பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர், அங்கிருந்த சிசிடிவி மற்றும் மின்சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துவிட்டு தப்பிவிட்டார். இது தொடர்பாக வங்கி மேலாளர் ஸ்ரீதர் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி ஏடிஎம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஏ.டி.எம். இயந்திரம் அருகே, மது போதையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த ஒருவரை, இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பதும், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததையும் ஒப்புக்கொண்டார். மேலும் தான் வேலையில்லாமல் சுற்றி வருவதாகவும், சகோதரி திருமணத்திற்கு பணம் இல்லாமல், மது அருந்திவிட்டு யோசித்த பொழுது, போதையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். அதன் பெயரில் போலீசார் விக்னேஷை கைது செய்து சிறையில அடைத்தனர்.

    Next Story
    ×