என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி பிடமனேரி ஏரியின் மீன்பாசி ஏலம்- நாளை நடக்கிறது
- மீன் வளர்க்கும் ஏரியில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- மீன்பிடிக்கும் போது பாதுகாப்பு உடைகள் அணிந்து கொள்ள வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தருமபுரி ஊராட்சி ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பிடமனேரி ஏரியில் 2022-23-ம் ஆண்டிற்கான மீன் பாசி குத்தகை ஏலம் வரும் 12-ம் தேதி காலை 11.30 மணிக்கு தருமபுரி ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
மீன்பாசி ஏலம் பி.டி.ஓ. மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடக்கிறது. ஏலம் கோருபவர்கள் ஒவ்வொருவரும் ரூ.1 லட்சம் முன்தொகை செலுத்த வேண்டும். ஏலத்தொகை செலுத்தியவர்கள் தவிர இதர நபர்கள் ஏலத்தில் பங்கேற்க இயலாது.
மீன் வளர்க்கும் ஏரியில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மீன்பிடிக்கும் போது பாதுகாப்பு உடைகள் அணிந்து கொள்ள வேண்டும். மறு ஏலம் எடுத்தவர்கள் ஏல தொகையை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.






