என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோடை வெயிலின் தாக்கத்தால் பீர் விற்பனை ஜோரு!
- உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பீர் வகைகளை விரும்புகிறார்கள்.
- மதுக்கடைகளில் பீர் பாட்டில்களே அதிகம் விற்று தீர்கிறது.
சென்னை:
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பெரும்பாலானோர் உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள குளிர்ந்த பீர் வகைகளை விரும்புகிறார்கள். `பீர்' என்பது முன்பெல்லாம் பலரது வாழ்க்கையில் ஓய்வுடன் தொடர்புடையதாக இருந்து வந்தது.
ஓய்வில் இருப்பவர்கள் மனதை ரிலாக்சாக வைத்துக்கொள்ள `பீர்' பருகினார்கள். சமீப காலமாக `பீர்' மதுபானமாக மாறி விட்டது.
மேலும் அக்னி வெயில் நாள்தோறும் உச்சம் தொட்டு வரும் நிலையில் மதுக்கடைகளில் பீர் பாட்டில்களே அதிகம் விற்று தீர்கிறது.
இதனால் பீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கோடைகாலத்தில் பீர் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பீர் விற்பனை ரூ.38,360 கோடியை தொட்டது. வரும் 2028-ம் ஆண்டில் இந்தியாவில் பீர் விற்பனை ரூ.62,240 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப ஆண்டுக்கு ஆண்டு பீர் விற்பனையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோடை வெயில் அதிகரிக்கும் போது பீர்களின் தேவை அதிகரிப்பதால் மதுபான கடைகளும் அதற்கு ஏற்ப பீர் பாட்டில்களை தயாராக வைத்து விற்பனையை அதிகரித்து வருகின்றன.
பீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் பரவலாக பீர்களை கிடைக்க செய்யும் வகையில் பல நிறுவனங்களுடன் கூட்டாண்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பீர் விற்பனை 40 முதல் 45 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மதுக்கடைகளில் உள்ள மதுபானங்களில் பீர் வகைகளே அதிகம் விற்பனையாகிறது. கடந்த ஆண்டு கோடைகாலத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் பீர் விற்பனை சரிந்தது. ஆனால் இந்த ஆண்டு கோடை மழை பெய்யாத நிலையில் வெயிலும் உக்கிரம் காட்டுவதால் பீர் விற்பனை அதிகரித்து உள்ளது.
மேலும் இந்த கோடை வெயிலுக்காக பல நிறுவனங்கள் புதிய ரகங்களில் பீர் வகைகளை அறிமுகப்படுதி உள்ளன. மதுப்பிரியர்களின் ரசனைக்கு ஏற்ப இந்த பீர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்