search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் பேரூராட்சி   குப்பைக் கிடங்கில் உயிரி அகழ்வு முறையில் குப்பைகளை பிரிக்கும் எந்திரம்: கூடுதல் தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு
    X

    சின்னசேலம் பேரூராட்சி குப்பை கிடங்கை கூடுதல் தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வுசெய்தார்.


    சின்னசேலம் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் உயிரி அகழ்வு முறையில் குப்பைகளை பிரிக்கும் எந்திரம்: கூடுதல் தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு

    • சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக பழைய குப்பைகள் தேங்கிய நிலையில் இருந்தது
    • இதில் அடிக்கடி சமூக விரோதிகள் தீவைப்பதால் அந்தபகுதி முழுவதும் புகைமயமாக காட்சியளிக்கும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக பழைய குப்பைகள் தேங்கிய நிலையில் இருந்தது. இதில் அடிக்கடி சமூக விரோதிகள் தீவைப்பதால் அந்த முழுவதும் பகுதி புகைமாக காட்சியளிக்கும்.இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதை உணர்ந்த பேரூராட்சி நிர்வாகம் இந்த தேங்கிய குப்பை கழிவு களை அகற்ற பேரூராட்சி துறையிடம் அனுமதி கேட்டப்பட்டது. இந்நிலையில் அந்த தேங்கி கிடக்கும் பழைய குப்பை கழிவுகளைஉயிரி அகழ்வு முறையில் இயந்திரம் மூலம் அகற்றுவதற்கு தனியார் நிறுவனத்திடம் ரூ.32.32 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. இந்த குப்பைகளை அகற்றும் பணி செயல் அலுவலர் உஷா, தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் ஆகியோர் மேற்பார்வையில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த இயந்திரத்தில் கல், மண் தனியாகவும், பிளாஸ்டிக்ல் பொருட்கள் தனியாகவும், மக்கிய குப்பைகள் தனியாகவும் வெளியேறும்.

    இந்நிலையில் உயிரி அகழ்வு முறையில் குப்பைகளை அகற்றும் பணியை நேற்று ' காலை கூடுதல் தலைமை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாள ருமான சிவதாஸ்மீனா, கலெக்டர் ஷ்ரவன்குமார் மற்றும் அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்தார். மேலும் ஒப்பந்ததாரரிடம்இந்த பணியை காலதாமதம் இல்லாமல் விரைவாக நேர்த்தியாக செய்து முடிக்கும்படி துறை செயலாளர் உத்தரவிட்டார். இந்தநிலையில் பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் பேரூராட்சி துணை சேர்மன் ராகேஷ், வார்டு உறுப்பினர்கள் , சாரங்கன் ,உமா ஜெயவேல், காந்தி,பேபிகுமார், பத்மாவதி சிவகுமார், சுகாதார ஆய்வாளர் முத்துகுமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×