என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/21/1884942-bjp-aarpattam.webp)
கள்ளக்குறிச்சி பாஜக மகளிர் அணி சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- சக்திவேல், சேகர், ரகுநாத பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஓ.பி.சி.பிரிவு மாநில செயலாளர் செல்வநாயகம், சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் ரேகா, மாவட்ட தலைவர் அருள் ஆகியோர் கலந்து கொண்டு தமிழகத்தில் தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடையும், ஊர்கள் தோறும் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக கூறி கண்டன உரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்டத் துணைத் தலைவர் சர்தார் சிங், மாவட்ட செயலாளர் மில் ஹரி, நிர்வாகிகள் பாக்கியராஜ், சக்திவேல், சேகர், ரகுநாத பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.