search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி பந்தயம்
    X

    போட்டியில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்த காட்சி.

    விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி பந்தயம்

    • பல்வேறு பகுதிகளில் இருந்து 42 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
    • வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே வீரகாஞ்சிபுரம் கிராமத்தில் உள்ள பொன் மாடசாமி கோவில் வைகாசி கொடை விழாவை முன்னிட்டு முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதனை விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 42 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன.

    போட்டியானது சிறிய மாடுகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு நடத்தப்ப ட்டது. பின்னர் இப்போ ட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையா ளர்களுக்கும், ஒட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டியினர் சார்பில் பரிசுத்தொகை மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது. திருவிழா வையொட்டி நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இரு புறமும் ஏராளமான பொது மக்கள் கூடியிருந்து கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் விழா கமிட்டியினர் ராமர், மாடசாமி, காசி, செல்வம், பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள்,கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×