என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கால்வாய் பணி பாதியில் நிறுத்தம் கால்வாய் பணி பாதியில் நிறுத்தம்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/23/1825564-013.webp)
மாக்கனூர் கிராமத்தில் 70 அடி கட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட சாக்கடை கால்வாய்.
கால்வாய் பணி பாதியில் நிறுத்தம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 200 அடி நீளமுள்ள சாக்கடை கால்வாய் பணியை முழுமையாக முடிக்காமல் சுமார் 70 அடி மட்டுமே கட்டியுள்ளனர்,
- மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே , ஒ.ஜி. அள்ளி பஞ்சாயத்தில் உள்ளது மாக்கனூர் கிராமம். இக்கிரமத்தில் சுமார் 200 வீடுகளில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் நீண்டகாலமாக சாக்கடைகால்வாய் இன்றி இருந்தது.
இந்நிலையில் பஞ்சாயத்து சார்பில் ரூ. 1.10 லட்சம் மதிப்பீட்டில்புதிய சாக்கடை கால்வாய் அமைப்பதாக கூறி பணியை தொடங்கினார்.
200 அடி நீளமுள்ள சாக்கடை கால்வாய் பணியை முழுமையாக முடிக்காமல் சுமார் 70 அடி மட்டுமே கட்டியுள்ளனர்,
மீதி பணியை செய்ய நிதி இல்லை என சாக்கடை கால்வாய் திட்டத்தை கைவிட்டதால் கழிவு நீர் வெளியேறாமல் வீடுகளின் முன்பு மற்றும் கிராமத்தின் நுழைவாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.