search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்- என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்
    X

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்- என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்

    • சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வழி செய்ய தமிழக அரசு முற்பட வேண்டும்.
    • இட ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாழும் நாடார் சமுதாய மக்களுக்கு போதிய கல்வித் தகுதி இருந்தும் அரசு பதவியில் முன்னுரிமை கிடைப்பதில்லை.

    பீகார், தெலுங்கானா போன்ற மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆனால் தமிழ்நாடு அரசு, மத்திய அரசுதான் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறி வருவது வேடிக்கையாக இருக்கிறது.

    மத்திய அரசு மீது பழிபோட்டு சமூக நீதியை புறக்கணிக்க நினைக்கும் எண்ணத்தை கைவிட்டு தமிழ்நாட்டில் சமூக நீதியை காப்பாற்றிட, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வழி செய்ய தமிழக அரசு முற்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×