search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
    X

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

    • கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
    • பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் வருகிற 11.1.2023 வரை பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்து பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், ஆகியோர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

    இந்த கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மேலும் பொதுமக்கள் எவரேனும் பள்ளி செல்லா , இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை dpckanchi@yahoo.co.in என்ற என்ற இ-மெயில் முகவரி அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×