search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமண்டஅள்ளி ஊராட்சிக்கு மத்திய அரசு விருது
    X

    புது டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் சாமண்ட அள்ளி ஊராட்சி தலைவரும், பட்டிமன்றப் பேச்சாளருமான மாசிலாமணி விருதை பெற்றுக் கொண்ட காட்சி.

    சாமண்டஅள்ளி ஊராட்சிக்கு மத்திய அரசு விருது

    • ரூ.450 கோடி ரூபாய் செலவில் 1.30 லட்சம் ஏக்கரில் நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
    • எங்கள் ஊராட்சி 369 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் என்றார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே அமைந்துள்ள சாமாண்டஅள்ளி ஊராட்சிக்கு பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் "துளி நீரில் அதிக பயிர்" என்ற திட்டத்திற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் "துளிநீரில் அதிக பயிர்" என்ற திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.745 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அந்த நிதியில் ரூ.2.19 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படும் ஊராட்சிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து ரூ.450 கோடி ரூபாய் செலவில் 1.30 லட்சம் ஏக்கரில் நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இத்திட்டத்தின் கீழ் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருவண்ணா மலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயலாக்கம் நடந்து வருகின்றது.

    இதில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் தோட்டக்கலைத்துறையின் கீழ் சாமாண்டஅள்ளி ஊராட்சியும் ஒன்றாகும். இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நுண்ணுயிர் பாசன கட்டமைப்பு அமைக்கப்பட்டு சுமார் 832 எக்டர்களில் மரவள்ளி, முலாம்பழம், வெண்டைக்காய், தக்காளி, தர்பூசணி போன்றவை பயிரிடப்பட்டுள்ளது.

    சொட்டுநீர் பாசன வசதியும், அதன் மீது நிலப் போர்வை அமைக்கப்பட்டுள்ளதால் குறைந்த நீரில் நல்ல தரமான பழங்கள் விளைச்சல் எடுத்துள்ளனர்.

    இப்பகுதி விவசாயிகள் குறைந்த நீரில் அதிக பயிர் திட்டத்தில் உள்ள விவசாயிகளை ஊக்கு விக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் இந்த ஆண்டுக்கான விருது சாமண்டஅள்ளி ஊரா ட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் விருது பெற்ற ஒரே ஊராட்சி இதுதான் என்று குறிப்பிட்டது.

    கடந்த வாரம் புது டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதை ஊராட்சி தலைவரும், பட்டிமன்றப் பேச்சா ளருமான மாசிலாமணி பெற்றுக் கொண்டார்.

    இது குறித்து அவர் கூறும் போது, எங்களது ஊராட்சியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி ஊராட்சி நிர்வாகத்துடன் வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் எடுத்த முயற்சியால் 832 ஏக்கர் நிலத்தடி நீர் பாசன பரப்புகளுக்கு முழுமையாக நுண்ணுயிர் பாசன கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் எங்கள் ஊராட்சி 369 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் என்றார்.

    இது குறித்து மொரப்பூர் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கலைவாணி கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பயன்படுத்தி வறண்ட பகுதியான சாமண்ட அள்ளியில் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் சிறப்பாக செயலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் குறைந்த நீரில் அதிக விளைச்சலையும், நல்ல வருவாயும் பெற்றுள்ளனர் என்றார்

    Next Story
    ×