என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு- 2ம் தாளில் 3.76 லட்சம் பேர் தேர்ச்சி
- தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ், டிஜி லாக்கர் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
- இரண்டாம் தாளில் 12.76 லட்சம் பேர் பங்கேற்றதில் 3.76 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
சேலம்:
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) இணைப்பில் உள்ள பள்ளிகள் மற்றும் இந்திய அரசாங்கம் சார்பில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
அதன்படி நடப்பாண்டுக்கான தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 7-ந்தேதி வரை நடைபெற்றது.
இதில் சென்னை, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளநிலை ஆசிரியர் பட்டதாரிகள், முதுநிலை ஆசிரியர் பட்டதாரிகள் ஏராளமானோர் பங்கேற்று ஆர்வத்துடன் எழுதினர்.
இதன் முடிவுகள் மத்திய கல்வி அமைச்சகத்தின் https://ctet.nic.in/ என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ், டிஜி லாக்கர் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
அதில் இருந்து தேர்வர்கள் தங்கள் செல்போன் எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம். தேர்வில் 14.22 லட்சம் பேர் முதல் தாளில் பங்கேற்றனர். அவர்களில் 5.80 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இரண்டாம் தாளில் 12.76 லட்சம் பேர் பங்கேற்றதில் 3.76 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.