என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னை-பெங்களூரு டபுள் டக்கர் ரெயிலில் திடீர் புகை- நடுவழியில் நின்றதால் பயணிகள் அச்சம்
ByMaalaimalar13 July 2023 4:40 PM IST (Updated: 13 July 2023 4:41 PM IST)
- ரெயில் என்ஜின் டிரைவருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர்.
- 15 நிமிடம் கால தாமதமாக டபுள் டக்கர் ரெயில் பெங்களூரை நோக்கி புறப்பட்டு சென்றது.
ஜோலார்பேட்டை:
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் ரெயில் இன்று காலை புறப்பட்டு வந்தது. வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம்-குடியாத்தம் இடையே வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது ரெயிலில் சி 6 ஏ.சி. பெட்டியின் சக்கரத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இது சி7 பெட்டிக்கு பரவியது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.
ரெயில் என்ஜின் டிரைவருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார்.
இதுகுறித்து குடியாத்தம் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது பிரேக் பழுதானதால் சக்கரத்தில் இருந்து புகை வந்தது தெரிந்தது.
பின்னர் ஊழியர்கள் அதனை சரி செய்தனர். இதனால் 15 நிமிடம் கால தாமதமாக டபுள் டக்கர் ரெயில் பெங்களூரை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×