search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப்பொருள் விற்பனை குறித்து செல்போனில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்- சென்னை காவல் துறை அறிவிப்பு
    X

    போதைப்பொருள் விற்பனை குறித்து செல்போனில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்- சென்னை காவல் துறை அறிவிப்பு

    • கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
    • தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் போதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் போலீசாரால் புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக கள்ளச் சாராயம், போலி மதுபானம், கஞ்சா மற்றும் மெத்தனால் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்தி வருபவர்கள் பதுக்கி வைப்பவர்கள் தொடர்பான புகாரை போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவிக்க செல்போன் எண்களை சென்னை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

    மதுவிலக்கு அமலாக்க பிரிவு வடக்கு மண்டலத்தில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை புளியந்தோப்பு காவல் மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் 8072864204 என்ற செல்போன் எண்ணிலும், மேற்கு மண்டலத்தில் அண்ணா நகர், கொளத்தூர், கோயம்பேடு காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042380581 என்ற செல்போன் எண்ணிலும், தெற்கு மண்டலத்தில் அடையாறு, புனித தோமையர் மலை, தி.நகர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042475097 என்ற செல்போன் எண்ணிலும், கிழக்கு மண்டலத்தில் திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், மயிலாப்பூர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 6382318480 என்ற செல்போன் எண்ணிலும் பொது மக்கள் தொடர்பு கொண்டு வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என சென்னை காவல் துறை தெரிவித்து உள்ளது.

    தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×