என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![54 வயதில் 39 முதுகலை பட்டம் பெற்ற சென்னை பேராசிரியர் 54 வயதில் 39 முதுகலை பட்டம் பெற்ற சென்னை பேராசிரியர்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/14/1821627-professor.webp)
X
54 வயதில் 39 முதுகலை பட்டம் பெற்ற சென்னை பேராசிரியர்
By
மாலை மலர்14 Jan 2023 2:13 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கலைப்புனிதன் திருப்பதியில் சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
- வரலாற்றுத் துறையில் பி.எச்.டி., வணிகவியல், புவியியல், சட்டத்துறைகளில் முதுகலை பட்டங்கள் உள்பட மொத்தம் 36 முதுகலை பட்டங்கள் பெற்றுள்ளார்.
சென்னை:
சென்னையை சேர்ந்த பேராசிரியர் கலைப்புனிதன் (54). திருப்பதியில் சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர் படித்து பட்டங்கள் பெறுவதில் புதிய சாதனை நிகழ்த்தி இருக்கிறார். 1988-ல் முதல் முதலாக எம்.ஏ. பட்டம் பெற்ற இவர் தொடர்ந்து 35 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் கலைத்துறை சார்ந்த படிப்புகளில் முதுகலை பட்டப்படிப்புகளை படித்துள்ளார். இதுவரை 26 எம்.ஏ. பட்டங்கள் பெற்றுள்ளார். வரலாற்றுத் துறையில் பி.எச்.டி., வணிகவியல், புவியியல், சட்டத்துறைகளில் முதுகலை பட்டங்கள் உள்பட மொத்தம் 36 முதுகலை பட்டங்கள் பெற்றுள்ளார்.
இவரது படிப்பு சாதனை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பேராசிரியர் கலைப்புனிதனின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X