search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களை பட்டதாரிகளாக  உருவாக்கிசாதனை படைத்து வருகிறார்:  அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு
    X

    பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் சான்றிதழ் வழங்கிய காட்சி.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களை பட்டதாரிகளாக உருவாக்கிசாதனை படைத்து வருகிறார்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

    • வெங்கடேச பெருமாள், மோகன் தாஸ், பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • முதல் 3 இடங்களை பிடித்த4 பேருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ- மாணவி களுக்கான கலைஞரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேச்சு போட்டிகள் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்க பூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் ரசூல் பாஷா, சிவப்பிரகாசம், மலையரசன், சரவணன், வெங்கடேச பெருமாள், மோகன் தாஸ், பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்

    சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து கருணாநிதி வரலாறு குறித்த பேச்சு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசும் போது, ஏழை தொழிலாளர்களின் மகன், மகள்களை பட்டதாரிகளாக உருவாக்கி சாதனை படைத்தவர்கருணாநிதி. அவர் வழியில் இன்று ஆட்சி செய்யும்முதலமைச்சர் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி இன்று பெண்களை பட்டதாரிகளாக உருவாக்கி சாதனை படைத்து வருகிறார் என்றார்.

    பேச்சுப்போட்டியில் பல்வேறு கல்லூரியிலிருந்து ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு கருணாநிதியின் வரலாற்றுகளையும், தமிழக மக்களுக்கு அவர் செய்த பல்வேறு சாதனைகளையும், பற்றி எடுத்துரைத்தினர். நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் கல்லூரி செயலாளர் ஸ்ரீபதி, ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், நகர செயலாளர் கார்த்திக்,தொண்டரணி பாஷா விளையாட்டு மேம்பாட்டு அணி வக்கீல் சந்திரன், அட்மா குழு வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட முதல் இ3டங்களை பிடித்த4 பேருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

    Next Story
    ×