என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சின்னசேலம் அரசு பள்ளி மாணவன் தேசிய கைப்பந்து போட்டிக்கு தேர்வு
- விளையாட்டு துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார்.
- தன் திறமையை வளர்த்துக் கொண்டு வந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் இவருடைய மகன் கௌசிக் (வயது 14). இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளி யில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விளையாட்டு துறையில் அதி கம் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். இந்த மாணவன் உள்ளூரில் நடைபெறும் கைப்பந்து போட்டியில் கலந்துகொண்டு தன் திறமையை வளர்த்துக் கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி அரியலூரில் நடை பெற்ற மாநில அளவிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து தேர்வு போட்டியில் கலந்து கொண்டு இந்திய தேசியப் பள்ளிகளின் விளையாட்டு குழுமத்தால் வரும் நவம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவி லான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணியில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் மாணவன் கௌசிக் வெற்றி பெற உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.