search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளநீர், நுங்கு, தர்பூசணி,விற்பனை அமோகம்
    X

    தருமபுரி நெசவாளர்காலனி சாலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் தர்பூசணி, நுங்கு வாங்குவதை படத்தில் காணலாம்.

    இளநீர், நுங்கு, தர்பூசணி,விற்பனை அமோகம்

    • தருமபுரியில் 100.4 டிகிரி வெப்பம் வாட்டி ெபாதுமக்களை வதைக்கிறது.
    • வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள பொதுமக்கள் இளநீர் ,நுங்கு ,தர்பூசணி சாப்பிட்டு வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. 100 டிகிரியை கடந்து 100.4 டிகிரி வெப்பம் வாட்டி வதைப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து சோர்ந்து போகும் நிலை உள்ளது. அதனால் பொதுமக்கள் இளநீர், நுங்கு, தர்பூசணி உள்ளிட்டவைகளை தேடிச்சென்று வாங்கு கின்றனர்.

    கோடைகாலத்தில் இளநீர் குடிப்பதால் உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும். உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும். இதிலுள்ள லாரிக் ஆசிட் முதுமை ஏற்படாமல் தடுக்கும். கோடைக்காலங்களில் தொடர்ச்சியாக இளநீர் குடித்து வந்தால் மேற்கண்ட பல நன்மைகள் கிடைக்கிறது.

    அதேபோல் நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு மருத்துவ பயன்கள் கிடைக்கிறது. நுங்கு உடலிலுள்ள சூட்டை தணித்து, கோடை காலத்தில் வரும் அம்மை மற்றும் வைரல் ஜூரம் தாக்காமல் பாதுகாக்கும். நுங்கை தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண் குணமடையும். மேலும், நுங்கிலுள்ள தண்ணீரை, உடலில் தடவினால் வியர்குரு தாக்கம் இருக்காது.

    மேலும் உடல் நலத்திற்கு அதிகளவில் ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய பழங்களில் தர்பூசணியும் ஒன்று. இதில், ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. கோடை காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியை தனிக்கக்கூடியது. தர்பூசணியில் இயற்கையாகவே இரும்பு சத்து நிறைந்துள்ளது. தினம்தோறும் ஒரு துண்டு தர்பூசணி சாப்பிட்டு வந்தால் நல்ல புத்துணர்ச்சியை அளிக்கும். இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றும் என இயற்கை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதனால் கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள பொதுமக்கள் இளநீர் ,நுங்கு ,தர்பூசணி, உள்ளிட்டவைகளை தேடி சென்று வாங்கி உண்பதால் அமோக விற்பனை உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×