என் மலர்
உள்ளூர் செய்திகள்
தேனி மாவட்டத்தில் தொடர் மழை முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு
- கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் மீண்டும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
- இதனால் அணைகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கூடலூர்:
கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் மீண்டும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக 70 அடியில் நீடித்து வந்த வைகை அணை நீர்மட்டம் சரிந்து 69.67 அடியாக உள்ளது.
அணைக்கு 934 கனஅடிநீர் வருகிறது. பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 2069 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மேற்குதொடர்ச்சி மலை மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 1508 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 136.20 அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1866 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 10 கனஅடிநீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.78 அடியாக உள்ளது. 29 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 24.6, தேக்கடி 15, உத்தமபாளையம் 1.4, வீரபாண்டி 3.4, வைகை அணை 1.8, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 4, ஆண்டிபட்டி 2, போடி 15.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.