என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறப்பு முகாமில் 12,62,089 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- இன்று 61,202 பயனாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
- பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 9,02,253 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 12,62,089 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 61,202 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 2,98,634 பயனாளிகளுக்கும் மற்றும் 9,02,253 பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.49% முதல் தவணையாகவும் 91.09% இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற 35 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 22 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள். மாநிலத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு நாளை தடுப்பூசி பணிகள் நடைபெறாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.