search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலும் ஒரு பெண் புகார் எதிரொலி- பாதிரியாரிடம் சைபர் கிரைம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை
    X

    மேலும் ஒரு பெண் புகார் எதிரொலி- பாதிரியாரிடம் சைபர் கிரைம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை

    • சைபர்கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    • மனுவை விசாரித்த நீதிபதி பாதிரியார் பெனட்டிக் ஆன்றோவை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியார். இவர் பெண்களுடன் இருக்கும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த நிலையில் பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத்திடம் புகார் அளித்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து சைபர்கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இது தொடர்பாக பாதிரியாரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு பிறகு மீண்டும் பாளை.ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் பாதிரியார் மீது மேலும் ஒரு கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அதன் பேரில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்காக நாகர்கோவில் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் 2-வது கோர்ட்டில் சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி பாதிரியார் பெனட்டிக் ஆன்றோவை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் சைபர் கிரைம் போலீசார் பாதிரியாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே அவரது லேப் டாப்பில் இருந்த புகைப்படங்கள் குறித்த விவரங்களை அவர் தெரிவித்து இருந்தார். ஒரு பெண்ணை காதலித்ததாகவும் பாதிரியாராக இருந்ததால் அவரை திருமணம் செய்ய முடியவில்லை. எனவே நண்பர்களாக பிரிந்து விட்டோம் என்று கூறியிருந்தார். அதே பதிலையே தற்பொழுதும் அவர் அளித்துள்ளார்.

    அவரிடம் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணைக்கு பிறகு இன்று மாலை பாதிரியார் பென டிக்ட் ஆன்றோ மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே நர்சிங் மாணவி கொடுத்த புகாரின் பேரில் உள்ள வழக்கில் பாதிரியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Next Story
    ×