search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி. புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்
    X

    போராட்டம் செய்த பொது மக்களை படத்தில் காணலாம்.

    டி. புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்

    • டி. புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • பள்ளிக்கு சுற்று மதில் சுவர் கட்டுவதற்காக ரூ.22லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ளது. இப்பள்ளி 2010ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உய ர்த்தப்பட்டு தற்போது 310 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தப் பள்ளியில் சுற்று மதில் சுவர் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, செய்துதரக்கோரியும் பள்ளியில் குப்பை கொட்டுவதாகவும் பள்ளியை சுற்றி முட்புதர்கள் மண்டி உள்ளதாகவும் பள்ளியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும் பள்ளி வழியாக ஆடு, மாடுகள், டிராக்டர்கள் உள்ளிட்ட அனைவரும் இவ்வழியாக செல்வதால் பள்ளி மாணவ மாணவிகள் படிப்பதற்கு இடையூறுகள் உள்ளதாக கூறி கிராம பொதுமக்கள் உயர்நிலைப் பள்ளியின் முற்றுகைப் போராட்டம் செய்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதா வது:- கடந்த வருடம் ஜூன் மாதம் 6-ந்தேதி உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை மூலம் பள்ளிக்கு சுற்று மதில் சுவர் கட்டுவதற்காக ரூ.22லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுநாள் வரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. மாவட்ட கலெக்டர் சுற்று மதில் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மேலும் பள்ளியில் குடிநீர் வசதி கழிவறை வசதி குப்பைகளை அகற்றி சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார்பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மேல் அதிகாரிகளிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×