search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க.விற்கு மரண அடி; தொடர்ந்து தோல்வி முகம்: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பாலகிருஷ்ணன் பேட்டி
    X

    விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்தபோது எடுத்தபடம்.

    கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க.விற்கு மரண அடி; தொடர்ந்து தோல்வி முகம்: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பாலகிருஷ்ணன் பேட்டி

    • கர்நாடக மாநில தேர்தலில் பா.ஜ.க.விற்கு மிக பெரிய தோல்வி ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது.
    • இது ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அவர் கூறியதாவது:- கர்நாடக மாநில தேர்த லில் பா.ஜ.க.விற்கு மிக பெரிய தோல்வி ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது. இது ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்துள்ளது. மோடி, அமித்ஷா கூட்ட ணிக்கும், பா.ஜ.க.விற்கும் மரண அடி கிடைத்துள்ளது. இந்த கூட்டணி தொடர்ந்து தோல்வி முகத்தை சந்தித்து வருகிறது. வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலிலும் பா.ஜ.க. படுதோல்வியை சந்திக்கும் என்பதற்கு கர்நாடகா மாநில தேர்தல் முன்னோட்டமாக அமைந்துள்ளது. குழந்தை திருமணம் நடந்து புகார் வந்து, அதன் பேரில் தான் போலீசார் நட வடிக்கை எடுத்துள்ளனர். நான் கூட குழந்தை திரு மணம் செய்தவன் தான் எனக் கூறி குழந்தை திருமணம் நல்லது என்பது போல கவர்னர் பேசி இருக்கிறார். இந்தியாவில் இதுநாள் வரை இவரை போல ஒரு கவர்னரை யாரும் சந்தித்தது இல்லை. இந்த கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதற்காக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். வருகின்ற 15-ந்தேதி விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பட்டியலின, பழங்குடி மக்கள் பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்பு மாநாடு நடை பெற உள்ளது. இம்மாநாடு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் மாலை 3 மணி அளவில் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சி.பி.எம். பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அமைச்சர் பொன்முடி, மாநில செயலாளர் பால கிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி, சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன், ரவிக்குமார் எம்.பி., வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஹரிகிருஷ்ணன், முத்துக் குமரன், ராஜேந்திரன், முருகன், அறிவழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×