search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நெல்லையில், தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
    X

    வண்ணார்பேட்டையில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நெல்லையில், தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

    • ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    • மணிப்பூர் கலவரம் மற்றும் பாலியல் வன்கொடுமை விவகாரம் வெட்கி தலைகுனிய வேண்டிய சம்பவம்.

    நெல்லை:

    மணிப்பூர் மாநிலத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக கலவரம் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணப்ப டுத்தப்பட்டு வீதியில் ஊர்வல மாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.

    மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

    இந்த கொடுமையான சம்பவத்தை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க மகளிர் அணி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை வண்ணார்பேட்டையில் செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நெல்லை கிழக்கு மாவட்ட மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் தலைமை தாங்கினார்.

    கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் கமலா நேரு, கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா அருள், மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, மகளிர் தொண்டரணி செயலாளர் அனிதா, மாவட்ட துணைச் செயலாளர்கள் கிரிஜா, தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மகளிர் அணியினர் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக பா.ஜனதா அரசை கண்டித்து எதிர்ப்பு பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் கூறுகையில்,

    மணிப்பூர் கலவரம் மற்றும் பாலியல் வன்கொடுமை விவகாரம் வெட்கி தலை குனிய வேண்டிய சம்பவம். இது தொடர்பாக பாராளு மன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலுடன் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும் பிரதமர் வாய் திறக்கவில்லை. பெண்கள் மீது மத்திய அரசு மரியாதை வைத்திருந்தால் உடனடியாக மணிப்பூரில் ஆளும் பா.ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக புலன் விசாரணை நடத்தி கைதானவர்களை தூக்கிலிட வேண்டும் என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர். ராஜூ, மூத்த நிர்வாகி சுப சீதாராமன், மேயர் சரவணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாள ருமான கிரகாம்பெல், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலை ராஜா, சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, ஜோசப் பெல்சி, போர்வெல் கணேசன், மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநகர் இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், கவுன்சிலர்கள் பவுல்ராஜ், வில்சன்மணித்துரை, ரவீந்தர், உலகநாதன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் மாயா, விவசாய அணி அமைப்பாளர் அய்யாச்சாமி பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், 31-வது பகுதி சபா உறுப்பினர் சேதுசெல்வம், கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தலைவர் அந்தோணிராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் அனு ராதா ரவி முருகன்,

    மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, முன்னாள் கவுன்சிலர்கள் நவநீதன், ராஜகுமாரி, ராஜேஸ்வரி, சைபுன் நிஷா, ரேவதி, மாமன்ற உறுப்பினர் பிரபா சங்கரி, மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், நிர்வாகிகள் வீரபாண்டியன், ஆறுமுக ராஜா, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×