என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி நிர்வாகம்

- பயணிகள் பேருந்துக்காக காத்திருக்க முடியாமல் திறந்த வெளியில் நின்று அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
- இந்த நடவடிக்கை நிரந்தரமான தீர்வுக்கு வழி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட நகர பேருந்து நகராட்சிக்கு சொந்தமான தனியார் கடைகளை குத்தகைக்கு எடுத்து வருகின்றனர்.
சில கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள் உள்வாடகைக்கு விட்டு கடையின் முன்பு பல சிறு கடைகளுக்கு அனுமதி வழங்கி ஆக்கிரமிப்பு செய்தாலும், இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பேருந்து செல்லும் பாதையிலேயே இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் பேருந்துகள், பயணிகளுக்கு இடையூறாக, பயணிகள் பேருந்துக்காக காத்திருக்க முடியாமல் திறந்த வெளியில் நின்று அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி பேருந்து நிலையத்திற்குள் வருவதால் சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
இது குறித்து பலமுறை புகாராகவும், நாளிதழ்களில் செய்திகளும் வெளியான நிலையில் நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமாரன் உத்தரவின் பேரில் நகர அமைப்பு ஆய்வாளர் ஜெயவர்மன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளர் சுசேந்திரன், உள்ளிட்ட அதிகாரிகள், பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தும் வகையில் நேற்று ஊழியர்களுடன் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இந்த நடவடிக்கை நிரந்தரமான தீர்வுக்கு வழி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.