என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில்சமத்துவ பொங்கல் விழா
- அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
- பொங்கல் வைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தருமபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரேணுகாதேவி, ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பாரம்பரிய முறைப்படி சர்க்கரை பொங்கல் பொங்கல் வைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், வைகுந்தன், கருணாநிதி செல்வராஜ், முருகேசன், முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பெரியண்ணன், முத்துலட்சுமி, நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






