என் மலர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் நகராட்சி ஆணையாளர், நகர மன்ற தலைவர் ஆய்வு -கழிப்பறையில் கூடுதல் வசூல் புகாரால் நடவடிக்கை
- பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கழிப்பறைகளை நேரடியாக ஆய்வு செய்தனர்.
- பூக்கடைகளை அகற்றி பணியாளர்கள் பூக்களை பறிமுதல் செய்து நகராட்சி வாகனத்தில் எடுத்து சென்றனர்.
தருமபுரி,
தருமபுரி நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலைய கழிப்பிடங்களில் சிறுநீா் கழிக்க 1 ரூபாய்க்கு பதில் 10 ரூபாய் வசூலிப்பதாக புகார் எழுந்தது. புகாரை தொடா்ந்து நகராட்சி ஆணையாளா் சித்ரா, நகரமன்ற தலைவா் லட்சுமி உள்ளிட்டோர் தருமபுரி நகர பேருந்து நிலையம் மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கழிப்பறைகளை நேரடியாக ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு செய்வதை முன்பே தெரிந்து கொண்ட ஒப்பந்ததாரர்கள் கழிப்பறைகளை சுத்தமாக பராமரித்து வைத்திருந்தனர். நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை, குளியல் அறையில் மின்விளக்கு வசதி இல்லாமல் இருள் மண்டி கிடந்தது.
இதனை அடுத்து நக ராட்சி ஆணையாளர் சித்ரா ஒப்பந்ததாரை அழைத்து குளியல் அறையில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் நகர பேருந்து நிலையத்தில் நகர பேருந்துகள் நிறுத்துவதற்கு இடம் இன்றி ஆக்கிரமிப்பு செய்திருந்த பூக்கடைகளை அகற்றி பணியாளர்கள் பூக்களை பறிமுதல் செய்து நகராட்சி வாகனத்தில் எடுத்து சென்றனர். பேருந்து நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் கடையின் அளவை விட கூடுதலாக முன்புறத்தில் பூக்களை கொட்டி விற்பனை செய்ய நிழல் குடை அமைத்திருந்தனர். நகராட்சி அதிகாரிகளின் உத்தரவை அடுத்து நிழலுக்காக போடப்பட்டிருந்த தகரங்களை கடைக்காரர்கள் அப்புறப்படுத்தினர்.