search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி-தம்மாம் இடையே நேரடி விமான சேவை: 123 பயணிகளுடன் பறந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
    X

    திருச்சி-தம்மாம் இடையே நேரடி விமான சேவை: 123 பயணிகளுடன் பறந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

    • புதிய விமான சேவையை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
    • வியாழன், ஞாயிறு ஆகிய இரு நாட்களில் விமான சேவை இயக்கப்படுகின்றன.

    கே.கே.நகர்:

    திருச்சியிலிருந்து சவூதி அரேபியாவிற்கு புதிய விமான சேவையை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

    வார நாள்களில் வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்களில் திருச்சி-தமாம் இடையே விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

    அட்டவணையின்படி, திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்குப் புறப்பட்டு (அங்குள்ள நேரப்படி) காலை 9.10 மணிக்கு தமாம் சென்றடையும் விமானம் மறு மாா்க்கத்தில் தமாம் கிங் பஹத் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து (அந்த நாட்டு நேரப்படி) காலை 10.10 மணிக்கு விமானம் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு திருச்சி வந்தடைகிறது.

    திருச்சி-தமாம் இடையிலான முதல் பயணத்தில் 123 போ் பயணித்தனா். ஞாயிற்றுக்கிழமை செல்ல இதுவரையில் 130 போ் முன்பதிவு செய்துள்ளனா்.

    திருச்சியிலிருந்து, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, துபை, சாா்ஜா என இதுவரை மொத்தம் 10 சா்வதேச நகரங்களுடன் விமான போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது 11-ஆவது நகரமாக தமாம் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமாம் ஒரு தொழில்துறை மையமாக இருப்பதால், இந்தியாவின் சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையிலும், இந்த விமான சேவை முக்கியத்துவம் பெறும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×