search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்த மாவட்ட     அளவிலான  மாரத்தான் ஓட்டம்:    மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
    X

    பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்த மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

    • விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது
    • விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. மாரத்தான் போட்டிகள் 3 பிரிவாக பிரித்து பள்ளி, பொதுப்பிரிவினர் மற்றும் மாணவ/மாணவிகள், ஆண்கள், பெண்கள் என 4 பிரிவுகளாக 5 கிலோ மீட்டர் தூரமும், திருநங்கைகள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்ட போட்டியும் நடத்தப்ப டவு ள்ளது. இப்போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.1000 மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் 5 பிரிவினர்களுக்கும் பரிசளிக்கப்படும். இப்போ ட்டியில் கலந்துகொண்டு போட்டி தூரத்தை நிறைவு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மாரத்தான் போட்டிகள் 01.05.2023 அன்று மாலை 3.30 மணியளவில் புதிய பஸ் நிலையம் அருகில் தளபதி திடல் வளாகத்திலிருந்து தொடங்கப்படும். போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரினை எம்.ஜி.ஆர் உள்விளை யாட்டரங்கில் பதிவு மேற்கொள்ளலாம். இந்த மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ/மாணவி ய ர்கள், பொதுப்பிரிவினர்கள் மற்றும் திருநங்கைகள் பெரு மளவில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டியும் மற்றும் சுற்றுசூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×