என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சங்கரன்கோவிலில் தேவர் படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு சங்கரன்கோவிலில் தேவர் படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/10/31/1974775-5sangaidmkdevar.webp)
X
சங்கரன்கோவிலில் தேவர் படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
By
TNLGanesh31 Oct 2023 1:51 PM IST
![TNLGanesh TNLGanesh](https://media.maalaimalar.com/profiles/75922/1728216-ganeshprofile.jpg)
- தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் கே.எஸ்.எஸ். மாரியப்பன் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, வெற்றி விஜயன், கிறிஸ்டோபர், மதிமாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, மாவட்ட பிரதிநிதி செய்யதுஅலி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன் உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X