என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான நேர்காணல். மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் தருமபுரி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தி.மு.க. சார்பு அணி பதவி:விண்ணப்பம் அளித்தவர்களிடம் நேர்காணல்
- விண்ணப்பங்கள் கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வந்தது.
- தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.
தருமபுரி,
தி.மு.க.வின் சார்பு அணிகளின் மாவட்டத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வந்தது.
அதன் அடிப்படையில் தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சார்பு அணிகளின் நிர்வாகிகளுக்கான விருப்பமனுக்கள் வழங்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி உள்ளிட்ட அணிகளின் மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களிடம் இருந்து மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.
இந்த நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் எத்தனை ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினராக உள்ளீர்கள்? கழகம் அறிவித்துள்ள எத்தனை போராட்டங்களில் கலந்து கொண்டீர்கள்? எத்தனை முறை சிறை சென்றீர்கள்? என்பன உள்ளிட்ட கேள்விகளை கேட்டு பதில்களை பதிவு செய்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது.தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தெற்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த துணை சேர்மன் பிரபாகரன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நேர்காணலில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் உமா சங்கர், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






