என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை மருந்து விற்பனை போலீசார் தீவிர கண்காணிப்பு தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை மருந்து விற்பனை போலீசார் தீவிர கண்காணிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/08/25/1751353-bodi.jpg)
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை மருந்து விற்பனை போலீசார் தீவிர கண்காணிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் போதை மருந்துகளை பஸ்சில் கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைஊசி சப்ளை செய்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் போதை மருந்துகளை பஸ்சில் கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் உத்தமபாளையத்தை சேர்ந்த முகமதுமீரான்(22), மாணிக்கம்(19) ஆகியோரை போதை மருந்துடன் மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் டாக்டர் பரிந்துரையின் பேரில் மட்டும் கிடைக்கும் மயக்க மருந்தை தவறான வழியில் போதைஊசியாக அதிக லாபத்திற்கு வாலிபர்கள், பள்ளி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் சின்னமனூரை சேர்ந்த தங்கேஸ்வரன்(20), காமாட்சிபுரத்தை சேர்ந்த சரவணக்குமார் ஆகியோர் திருச்சியை சேர்ந்த ஜோனத்தன்மார்க்(30) என்பவரிடம் மருந்துகளை பெற்று விற்பனை செய்தது தெரியவந்தது.
ஜோனத்தன்மார்க்குக்கு உதவியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வினோதினி செயல்பட்டதும் தெரியவந்தது. அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து போதை மருந்து, ஊசிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களின் வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளனர்.
திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ரூபேஸ்குமார் மீனா மேற்பார்வையில் டி.எஸ்.பிக்கள் பாபுபிரசாத், சுரேஷ், தேனி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சின்னமனூர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைஊசி சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. எனவே தேனி மாவட்டத்தில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.