என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கே.கே.நகர், போரூர், கிண்டி பகுதியில் 27, 28-ந் தேதிகளில் மின்நிறுத்தம்
    X

    பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கே.கே.நகர், போரூர், கிண்டி பகுதியில் 27, 28-ந் தேதிகளில் மின்நிறுத்தம்

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடுமின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கே.கே.நகர், போரூர், கிண்டி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின்நிறுத்தம் செயல்படும் இடங்கள் வருமாறு:-

    தாம்பரம்:- ராஜகீழ்பாக்கம் கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, ஐ.ஒ,பி காலனி, அவ்வை நகர், பொன்னியம்மன்கோவில் தெரு, ஏரிக்கரை தெரு பம்மல் பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, மகிமைதாஸ் தெரு, எம்.ஜி.ஆர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    கே.கே.நகர்: ஆழ்வார்திருநகர் காமாட்சி நகர் மெயின் ரோடு, அப்பா தெரு, காமகோடி நகர், வேல்முருகன் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    போரூர்: மங்களா நகர், கணேஷ் அவென்யூ. காவியா கார்டன், செந்தில் நகர், வெங்கடேஸ்வர நகர் 1-வது மெயின் ரோடு, மீனாட்சி நகர், தாங்கள் தெரு, மாங்காடு நண்பர்கள் நகர், வைத்தி நகர், பாரி கார்டன், ராயல் சிட்டி, ரஹமத் நகர், அபி எஸ்டேட், குன்றத்தூர் மெயின் ரோடு, நரிவனம் சாலை, அடிசன் நகர் திருமுடிவாக்கம் முருகன் கோவில் மெயின் ரோடு, நல்லீஸ்வரர் நகர், பால்வாராயண் குளக்கரை தெரு, வெங்கடாபுரம், 4வது தெரு சிட்கோ திருமுடி வாக்கம், ஐயப்பந்தாங்கல் மேட்டு தெரு, தனலட்சுமி நகர், பாலாஜி அவென்யூ, சுப்பிரமணி நகர், தக்ஷன் அபார்ட்மெண்ட் கோவூர் ஸ்ரீனிவாச நகர், மூகாம்பிகை நகர், மாதா நகர், தில்லை நடராஜா நகர், பாலாஜி நகர், குமரன் ஹார்டுவார்ஸ் மெயின் ரோடு, சுப்புலட்சுமி நகர், ஒண்டி காலனி, பாபு கார்டன் செம்பரம்பாக்கம் பனிமலர் மருத்துவ கல்லூரி, டிரங்க் ரோடு ஒரு பகுதி, வரதராஜபுரம் எஸ்.ஆர்.எம்.சி. சமயபுரம், மூர்த்தி நகர், தர்மராஜா நகர் திருவேற்காடு கன்னபாளையம் ஆயில் சேரி, பிடாரிதங்கள், கோளப்பஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    கிண்டி: ஆதம்பாக்கம் கருணை தெரு, பார்த்தசாரதி நகர் 1 முதல் 11வது தெரு ஆலந்தூர் தொலைபேசி எக்ஸ்சேஞ்ச், பி.எஸ்.எஸ்.பி பள்ளி, பரங்கிமலை, மவுண்ட் பூந்தமல்லி ரோடு ஒரு பகுதி, ராமர் கோவில் தெரு, டி.ஜி.நகர், பழவந்தாங்கல் ஒரு பகுதி மடிப்பாக்கம், குபேரன் நகர் 1 முதல் 12-வது தெரு, மூவரசம்பேட்டை எம்.எம்.டி.சி. காலனி மெயின் ரோடு, ராகவா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    இதேபோல் 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    தாம்பரம்: ராஜகீழ்பாக்கம் சாம்ராஜ் நகர் 1 முதல் 8-வது தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, குருசாமி நகர், அம்பேத்கர் தெரு, முடிச்சூர் முல்லை நகர், முத்துமுருகன் நகர், மகாலட்சுமி நகர், சக்தி நகர் பம்மல் வெங்கட்ராமன் தெரு, திருவள்ளுவர் தெரு, எம்.ஜி,ஆர்.நகர், அன்னிபெசன்ட் தெரு, அண்ணா சாலை குறுக்கு தெரு, சிட்லபாக்கம் அவ்வை தெரு, காமராஜர் தெரு, 100 அடி ரோடு, திருவள்ளுவர் நகர் பல்லாவரம் பஜனை கோவில்தெரு, ராஜாஜி நகர், தர்கா ரோடு, காமராஜ் நகர், ரேணுகா நகர்மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    தண்டையார்பேட்டை: டி.எச் .ரோடு, ஜி.ஏ ரோடு ஒரு பகுதி, பால அருணாச்சலம் தெரு, கப்பல்போலு தெரு ஒரு பகுதி நாபாளையம் மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், எழில் நகர், வெள்ளிவாயல், கொண்டகரை, எம்.ஆர்.எப் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    போரூர்: திருமுடிவாக்கம் பழந்தண்டலம் கிராமம், அண்ணா நகர், பூந்தண்டலம், 11, 12, 13-வது தெரு திருமுடிவாக்கம் சிட்கோ கோவூர் குமரன் நகர் முழுவதும், ஆறுமுகம் நகர், மேல்மா நகர், இரண்டாம் கட்டளை காவனூர் நடைபாதை, கண்ணப்பன் நகர், திருவள்ளுவர் தெரு, மோகலிங்கம் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    கிண்டி: ஐ.பி.சி. காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், பூத்தபேடு, நெசப்பாக்கம், ஜெய் பாலாஜி நகர் மற்றும் கான் நகர், எம்.ஜி.ஆர். நகர் ஒரு பகுதி, தனகோட்டி ராஜா தெரு, முனுசாமி தெரு, ராஜ்பவன் வண்டிகாரன் தெரு ஒரு பகுதி, நேரு நகர் ஒரு பகுதி, பரங்கிமலை, மகாலட்சுமி 10வது தெரு, வானுவம்பேட்டை நங்கநல்லூர், பி.வி.நகர், மடிப்பாக்கம், எல்.ஐ.சி.நகர் முழுவதும், மூவரசம்பேட், இந்து காலனி புழுதிவாக்கம் சின்னமணி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×