என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வரத்து அதிகரிப்பால் முருங்கை விலை சரிவு- விவசாயிகள் கவலை
- இந்த வாரம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- வடமாநில வியாபாரிகள் முருங்கை கொள்முதல் செய்வதை நிறுத்தி உள்ளனர்.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர், கன்னிவாடி வாரச்சந்தைகளில் வாரம் தோறும் முருங்கைக்காய் சந்தை நடைபெறுவது வழக்கம். மூலனூர், கன்னிவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த முருங்கைக்காய்களை மூலனூர், கன்னிவாடி வாரச்சந்தை மற்றும் தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து முருங்கைக்காய்களை வாங்கி செல்கிறார்கள்.
பின்னர் இதை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது வட மாநில வியாபாரிகள் முருங்கை கொள்முதல் செய்வதை நிறுத்தி உள்ளனர். இதனால் மூலனூர் பகுதியில் வரத்து அதிகமானதால் இந்த வாரம் முருங்கை விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.37-க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கை இந்த வாரம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் மரம், செடி முருங்கை, கருமுறுங்கை என அனைத்து முருங்கைகளும் இதே விலை நிலவரத்தில் விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.