search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி துறைமுகத்தை ஊழியர்கள் முற்றுகை
    X

    காரைக்கால் துறைமுகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்.

    காரைக்கால் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி துறைமுகத்தை ஊழியர்கள் முற்றுகை

    • தனியார் துறை முகத்தை அண்மையில் அதானி குழுமம் கையகப்ப ப்டுத்தியுள்ளது.
    • பல்வேறு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திரு.பட்டினத்தை அடுத்துள்ள வாஞ்சூர் பகுதியில் இயங்கி வந்த, தனியார் துறை முகத்தை அண்மையில் அதானி குழுமம் கையகப்ப ப்டுத்தியுள்ளது. அதுமுதல், துறைமுகத்தின் பல்வேறு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வாஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் துப்புரவு ஊழியர்கள், கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யப்ப டுவார்கள் என கூறியதாக தெரிகிறது. ஆனால், 14 ஆண்டுகள் ஆகியும் ஒரு ஊழியரை கூட பணி நிர ந்தரம் செய்யப்படவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள், துறைமுகம் வாயிலில் முற்றுகையிட்டு போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட் டத்தின்போது, 14 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பெண் துப்புரவு ஊழியர்களை, உடனே பணி நிரந்தரம் செய்யவேண்டும். என வலியுறுத்தப்பட்டது. இதை அறிந்த, திரு.பட்டினம் போலீசார், போராட்டக்காரர்களுடன் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, துறை முகம் நிர்வாகத்துடன் இது குறித்து பேசப்படும் என சமாதானம் செய்ததையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனர்.

    Next Story
    ×