என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அருகருகே நின்று சிரித்தபடி பிரதமர் மோடியை வழி அனுப்பி வைத்த ஈபிஎஸ்-ஓபிஎஸ்
- பிரதமருக்கு வரவேற்பு மற்றும் வழி அனுப்பும் நிகழ்ச்சிகளில் ஆதரவாளர்களுடன் இருவரும் பங்கேற்பு.
- நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனை.
தமிழகம் வந்த பிரதமர் மோடி திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார். அதேபோல் ஓ.பன்னீர் செல்வமும் தமது ஆதரவாளர்களுடன் பிரதமரை வரவேற்றார். அதிமுகவின் இரு தலைவர்களும் ஒன்றாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதேபோல் பட்டமளிப்பு விழா நிறைவுக்கு பின்னர் மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியிலும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இருவரும் அருகருகே நின்றபடி பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
பிரதமரை வழி அனுப்பும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, ராஜன் செல்லப்பா, நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், மதுரை மேயர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி சிரித்தப்படி பூங்கொத்துக் கொடுத்து வழி அனுப்புவதும், அருகில் ஓ.பன்னீர் செல்வம் சிரித்தபடி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. பிரதமருக்கான வரவேற்பு நிகழ்ச்சியை போலவே வழி அனுப்பும் நிகழ்ச்சியிலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இன்று இரவு சென்னை வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நாளை, ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.