என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓ.பி.எஸ்.க்கும், எங்களுக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு கிடையாது முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
- ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர். திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் சிறப்புரையாற்றி பேசினார்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர். திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் சிறப்புரையாற்றி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
1972-ல் இருந்து நான் அ.தி.மு.க.வில் இருக்கிறேன். சாதாரண தொண்டனாக இருந்த நான் 50 ஆண்டு காலத்தை முடித்து பொதுச் செயலாளர் பதவியை தவிற என்னென்ன பதவிகள் உள்ளதோ அத்தனை பதவிகளையும் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் பெற்றுள்ளேன்.
எங்களுக்கும், ஓ.பி.எஸ்.க்கும் வாய்க்கால் வரப்பு தகராறு கிடையாது. முதல்-அமைச்சராக இருப்பவர்தான் கட்சிக்கு தலைமையாக இருக்க வேண்டும் என்பது நியதி.
அப்படி இருந்த போதும் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத்தலைமை விவகாரம் வெடிக்கத் தொடங்கியது.
அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிதான் பொதுச் செயலாளராக வரவ ேவண்டும் என ஏகமனதாக ெதரிவித்தனர். இதற்கு காரணம் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் ஸ்டாலினை பார்த்து சிரிப்பதும், அவரது மகன் ரவீந்திரநாத் நேரடியாக ஸ்டாலினை சந்தித்து ஆட்சியை பாராட்டி பேசுவதும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பிடிக்க வில்லை. அதனால்தான் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதின்றம் சென்ற ஓ.பி.எஸ். கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். உண்மையிலேயே தொண்டர்கள் பலம் ஓ.பி.எஸ். பக்கம் இருக்குமானால் அவர் தனியாக கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கட்டும்.
ஸ்டாலினை பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களையும் முடக்குவதிலேயே குறியாக உள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறார்.
முதல் கையெழுத்தாக நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறி தற்போது வரை மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளார். இந்த ஆட்சி அகற்றப்பட்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்றார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் முருக்கோடை ராமர், முன்னாள் எம்.பி. பார்த்திபன், ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஒன்றிய துைணச் செயலாளர் அமரேசன், பேரூர் செயலாளர் அருண்மதி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்