search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பொய்த்து போன பூ மகசூல்-விவசாயிகள் கவலை
    X

    செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பொய்த்து போன பூ மகசூல்-விவசாயிகள் கவலை

    • விவசாயிகள் கார்,பிசான சாகுபடி காலங்களில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவார்கள்.
    • பூ மகசூல் பயிர்களை பயிரிட ஆர்வம் காட்ட விவசாயிகள் தயங்கி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான செங்கோட்டை சுற்று வட்டார பகுதிக்கே உரிய சிறப்பு பூ மகசூல் ஆகும். ஆண்டுக்கு முப்போகம் விளையக்கூடிய அளவுக்கு பசுமை நிறைந்த பகுதியாக காட்சியளிக்கும் இந்த சுற்றுவட்டாரத்தில், விவசாயிகள் கார் மற்றும் பிசான சாகுபடி காலங்களில் நெல் மற்றும் மா, தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டப் பயிர்களை பயிரிடுவார்கள்.

    ஏனைய காலங்களில் பூ மகசூலான அத்தியாவசிய தேவையான காய்கறிகள், உளுந்து, சோளம், பயிறு உள்ளிட்ட கோடைகால பயிர்களும், நெல்லி, புளி உள்ளிட்ட வறட்சியை தாங்கும் பயிர்கள் என அனைத்தும் பயிரிடப்படு வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தில் வடகரை, அச்சன்புதூர், இலத்தூர், சிவராமபேட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோளம், மொச்சை, மல்லி உள்ளிட்டவை பயிரிடப்பட்டு நல்ல மகசூல் கிடைக்கும்.

    இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால் மோட்டை, ஸ்ரீமூலப்பேரி, அடவிநயினார் உள்ளிட்ட அனைத்து அணைகளும் குறைந்த அளவிலேயே தண்ணீர் உள்ளது. தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருவதால் ஆறுகள், கால்வாய்கள் ஓடைகள் அனைத்திலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

    இதனால் செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பூ மகசூல் பயிர்களை பயிரிட ஆர்வம் காட்ட விவசாயிகள் தயங்கி வருகின்றனர். தற்போது காய்கறிகள் விலை உச்சத்தை தொட்ட நிலையில், காலநிலை மாற்றத்தால் நிலத்தினை உழுது பக்குவப்படுத்தி எதிர்ப்புடன் காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

    Next Story
    ×