search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் விவசாயிடம் ரூ. 51 ஆயிரம் அபேஸ்:  போலி சப்-இன்ஸ்பெக்டருக்கு  வலைவீச்சு
    X

    திண்டிவனத்தில் விவசாயிடம் ரூ. 51 ஆயிரம் அபேஸ்: போலி சப்-இன்ஸ்பெக்டருக்கு வலைவீச்சு

    • திண்டிவனத்திற்கு பஸ்ஸில் வந்து மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி போலீஸ் தோ ரணையில் ராதாகிருஷ்ணன் வைத்திருந்த பையில் கஞ்சா மது பாட்டல் உள்ளதா என சோதனை செய்தார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே தாதாபுரம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் விவசாயி. இவர் திண்டிவனத்திற்கு பஸ்ஸில் வந்து மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார்.பின்பு பஸ்ஸில் வெள்ளிமேடு பேட்டைக்கு வந்தார். அங்குள்ள ஒரு வங்கியில் நெல் விற்ற பணம் 51 ஆயிரத்தை பெற்று பையில் வைத்துக்கொண்டு வெள்ளி மேடை ப்பேட்டையில் உள்ள நிலத்திற்கு மண் பாதையில் நடந்து சென்றார்.

    அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ராதாகிருஷ்ணன் யிடம் தான் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி போலீஸ் தோ ரணையில் ராதாகிருஷ்ணன் வைத்திருந்த பையில் கஞ்சா மது பாட்டல் உள்ளதா என சோதனை செய்தார். சோதனையில் போது அவரின் கவனத்தை திசை திருப்பி பையில் வைத்திருந்த பணத்தை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். மர்ம நபர் சென்ற பின் பையைப் பார்த்தபோது ரூ. 51 ஆயிரம் பணம் காணவில்லை.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார். ராதாகிருஷ்ணன் புகாரின் பேரில் வெளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி திருட்டு போன்ற சம்பவங்கள்கடந்த சில தினங்களாக அதிக அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×