search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்ட  விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்: கலெக்டர் தகவல்
    X

    கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்: கலெக்டர் தகவல்

    • வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் கார்னரில் செலுத்தி பதிவு செய்து பதிவிற்கான ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் தங்கள் பயிர்கள் இயற்கை இடர்பாடு களினால்ஏற்படும் மகசூல் இழப்பிற்கு நஷ்ட ஈடு பெற்று வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023 -2024 -ம் ஆண்டிற்கான சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் நெல் (சம்பா) பயிருக்கு15.11.2023 மற்றும் மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு 31.10.2023-ம் தேதி வரையிலும்,உளுந்து பயிருக்கு 15.11.2023 வரையும், மணிலா பயிருக்கு 30.12.2023, கரும்பு பயிருக்கு30.3.2024, தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி பயிருக்கு 29.02.2024, கத்தரி மற்றும்வெங்காயம் பயிருக்கு 31.01.2024 தேதி வரையிலும் விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடுசெய்து கொள்ளலாம்.

    மேலும், காப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ.487- ம்,மக்கா ச்சோளத்திற்கு ரூ.296-ம், பருத்தி ரூ.484-ம், உளுந்து பயிருக்கு ரூ.207-ம், மணிலாபயிருக்கு ரூ.427, கரும்பு பயிருக்கு ரூ.2,717, மரவள்ளி பயிருக்கு ரூ.1,499, கத்தரி பயிருக்குரூ.808 மற்றும் வெங்காயம் பயிருக்கு ரூ.884 காப்பீட்டுத் தொகையை பொது சேவை மைய ங்கள்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும்தேசிய காப்பீட்டு இணைய தளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில்செலுத்தி பதிவு செய்து பதிவிற்கான ரசீது பெற்றுக்கொள்ளலாம். அதற்கு தேவை யானஆவணங்கள், நடப்பு பருவ அடங்கல்(பசலி ஆண்டு 1433), சிட்டா, வங்கி கணக்கு புத்தகம்மற்றும் ஆதார் அட்டை ஆகியவையாகும். பதிவு செய்யும் போது விவசாயின் பெயர் மற்றும்விலாசம், நில பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகியவிவரங்களை சரியாக கவனித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். கள்ளக் குறிச்சி மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு இணைந்து பதிவுசெய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×