search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை சாக்கு குடோனில் தீ விபத்து- ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
    X

    மதுரை சாக்கு குடோனில் தீ விபத்து- ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

    • சிவபாலன் நேற்று இரவு குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
    • குடோன் உரிமையாளர் சிவபாலன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை:

    மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்தவர் சிவபாலன் (வயது 46). இவருக்கு சொந்தமான சாக்கு குடோன் அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பழைய சாக்குகள், நோட்டு, டைரி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

    இந்தநிலையில் சிவபாலன் நேற்று இரவு குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவரது குடோனில் இருந்து நள்ளிரவு 12 மணி அளவில் 'குபுகுபு'வென கரும்புகை வந்தது.

    இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது தொடர்பாக தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடோனில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து அனுப்பானடி, பெரியார் பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான சாக்கு, நோட்டு, டைரி ஆகியவை எரிந்து நாசமாகி விட்டன.

    இதுபற்றி குடோன் உரிமையாளர் சிவபாலன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×