search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை அருகே சென்னை-பெங்களூரு சாலையில் வெள்ளம்- கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    ராணிப்பேட்டை அருகே சென்னை-பெங்களூரு சாலையில் வெள்ளம்- கடும் போக்குவரத்து நெரிசல்

    • குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டன.
    • பயணிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மேலகுப்பம் மலையில் இருந்து மழை நீர் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.

    விவசாய நிலங்களில் இருந்த மழை நீர் வடிந்து இன்று காலை ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. அப்பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் மழை நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.

    மழை நீர் வழிந்து செல்ல வழி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

    ஏற்கனவே கடந்து 2 நாட்களாக பெய்த மழையில் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறியது. குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டன.

    இதனால் சென்னையில் இருந்து பெங்களூரு மார்க்கமாக வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் வரிசையாக நின்றன.

    பயணிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி சாலையை சீரமைத்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    Next Story
    ×