என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிஸ்கட்டில் பிளாஸ்டிக் துகள்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை
- பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- பிஸ்கட் பாக்கெட்டை கைப்பற்றி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் விசாரணை நடத்தினர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் குழந்தைகளுக்காக பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று குழந்தைகளிடம் பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்துள்ளார். குழந்தைகள் பிஸ்கட் பாக்கெட்டை உடைத்து சாப்பிட முயன்ற போது, பிஸ்கட்டின் உள்ளே பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டு தந்தையிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
பல்லடம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கேசவராஜ் அந்த பிஸ்கட் பாக்கெட்டை கைப்பற்றி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- அது பிரிட்டானியா கம்பெனியின் தயாரிப்பு பிஸ்கட். இதனை பொங்கலூரில் உள்ள ஒரு விநியோகிஸ்தர் கடைக்கு வினியோகம் செய்துள்ளார். அவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கம் வந்த பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.