என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டோக்களில் மதுரை அ.தி.மு.க., மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டும் காட்சி.
ஆட்டோக்களில் மதுரை அ.தி.மு.க., மாநாடு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தொடங்கி வைத்தார்

- ஆட்டோக்களில் மதுரை அ.தி.மு.க., மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- மாநகரில் 1 லட்சம் வாகனங்களில் மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஆட்டோக்களில் மதுரை அ.தி.மு.க., மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் தொடங்கி வைத்தார்.
மதுரையில் ஆகஸ்ட் 20 ந் தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க திருப்பூர் அ.தி.மு.க.வினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அதன்படி திருப்பூர் மாநகரில் ஆட்டோக்களில் விளம்பர பதாகைகள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் பணியை திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் தொடங்கி வைத்தார். மாநகரில் 1 லட்சம் வாகனங்களில் மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் பணிகள் நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கட்சி நிர்வாகிகள் கருணாகரன், திலகர் நகர் சுப்பு, ஏ.எஸ்.கண்ணன், வி.பி.என்.குமார், சி.எஸ்.கண்ணபிரான், ஆண்டவர் பழனிசாமி, சின்னசாமி, யுவராஜ் சரவணன், தனபால், அன்பு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.