என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போடி அருகே கஞ்சா செடி பயிரிட்டவர் கைது
- தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு வருகிறது.
கஞ்சா விற்பனை மட்டுமின்றி வனப்பகுதியில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்க்கும் நபர்களையும் போலீசார் கண்டறிந்து அவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி போடி வனச்சரகத்திற்குட்பட்ட கொட்டக்குடி காப்புகாடு முந்தல் பிரிவில் கஞ்சா செடி பயிரிட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சாலப்பாறை காலனியை சேர்ந்த தம்புராஜ் மகன் ராஜா(32) என்பவர் கஞ்சா நாற்றுகள் மற்றும் விதைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த வனத்துறையினர் ராஜாவை பிடித்து குரங்கணி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.