என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அண்ணாநகரில் பழைய பொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழு
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிர ராஜா பங்கேற்று ஈரோட்டில் நடைபெற உள்ள மே-5, வணிகர்தின மாநில மாநாடு சம்பந்தமாக சிறப்பு பேருரையாற்றுகிறார்.
- பழைய பொருள் வியாபாரிகள் சங்கப் பொருளாளர் இருதயராஜ் நன்றியுரையாற்றுவார்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பழைய பொருள் வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, அண்ணாநகர், திருமங்கலம், பெரியார் சமுதாய நலக்கூடத்தில், சென்னை மாநகர பழைய பொருள் வியாபாரிகள் சங்கத்தலைவர் இ.எம்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற உள்ளது.
செயலாளர் சேதுராமன், காமராஜ், செல்வம், சீனிவாசன் வரவேற்கிறார்கள். நிர்வாகிகள் பாலசுந்தரம், வைரவன், பரமசிவம், ராஜாசிங், சூசைமிக்கேல், தாமஸ், நாசர்கான், செல்வராஜ், கென்னடி, அருள் ரூபான், ஜெயபிரகாஷ், செய்யதுபாரூக், பிரகாஷ், மணிவண்ணன், செல்வகுமார், ஜெயராஜ், கொடி அரசன், அப்துல்மாலிக் முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிர ராஜா பங்கேற்று ஈரோட்டில் நடைபெற உள்ள மே-5, வணிகர்தின மாநில மாநாடு சம்பந்தமாக சிறப்பு பேருரையாற்றுகிறார்.
பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, பேராசிரியர் ராஜ்குமார், சென்னை மண்டலத்தலைவர் கே.ஜோதிலிங்கம், காஞ்சி மண்டலத் தலைவர் அமல்ராஜ், மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் மற்றும் சென்னை, காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், பழைய பொருள் வியாபாரிகள் சங்க அனைத்துப் பகுதி நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர். பழைய பொருள் வியாபாரிகள் சங்கப் பொருளாளர் இருதயராஜ் நன்றியுரையாற்றுவார்.
பழையபொருள் வியாபாரிகளுக்கு மிகவும் தலையாய பிரச்சனையாக உள்ள ஜி.எஸ்.டி-யில் உள்ள முரண்பாடுகள், குளறுபடிகள் சம்பந்தமாக கலந்து ஆலோசித்து அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்து உடனடியாக தீர்வு காண மேல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.