என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்னையில் இஞ்சி தட்டுப்பாடு- கடைகளில் 'இஞ்சி டீ' நிறுத்தம்
- கர்நாடகா மாநிலத்தில் இருந்து தான் நாடு முழுவதும் இஞ்சி சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
- ஜூலை மாதம் அறுவடை செய்யப்பட்டு புது இஞ்சி விற்பனைக்கு வரத் தொடங்கியதும் இஞ்சியின் விலை படிப்படியாக குறையும்.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் மைசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இஞ்சி விற்பனைக்கு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் மொத்த விற்பனையில் ஒரு மூட்டை (60 கிலோ) இஞ்சி ரூ.3 ஆயிரத்துக்கு விற்றது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ இஞ்சி ரூ.70-க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் படிப்படியாக அதிகரிக்க தொடங்கிய இஞ்சியின் விலை கடந்த வாரம் புதிய உச்சமாக ஒரு மூட்டை இஞ்சி ரூ.10ஆயிரத்து 300 வரை எகிறியது. இன்று கோயம்பேடு மார்கெட்டில் ஒரு மூட்டை இஞ்சி ரூ.9 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
மேலும் இஞ்சியின் வரத்தும் குறைந்ததால் அதன் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. இஞ்சி தட்டுப்பாடும் நிலவுகிறது. இதன் காரணமாக சில்லறை விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ இஞ்சி ரூ.240 வரை விற்பனை ஆனது. இந்த விலை உயர்வு கடந்த ஒரு மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது. இஞ்சி விலை அதிகரித்து உள்ளதால் பெரும்பாலான கடைகளில் இஞ்சி டீ போடுவதையே நிறுத்திவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இஞ்சி மொத்த வியாபாரி ரெஜீஷ் கூறியதாவது:-
கர்நாடகா மாநிலத்தில் இருந்து தான் நாடு முழுவதும் இஞ்சி சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இஞ்சிக்கு போதிய விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் தொடர்ந்து இஞ்சி பயிரிடுவதை நிறுத்திவிட்டனர்.
தற்போது குறைந்த விவசாயிகள் மட்டுமே இஞ்சியை உற்பத்தி செய்து வருவதால் தட்டுப்பாடு ஏற்பட்டு இஞ்சியின் விலை திடீரென 3 மடங்காக அதிகரித்து உள்ளது. ஜூலை மாதம் அறுவடை செய்யப்பட்டு புது இஞ்சி விற்பனைக்கு வரத் தொடங்கியதும் இஞ்சியின் விலை படிப்படியாக குறையும்.
கோயம்பேடு மார்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.200-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் வெளி மார்கெட்டில் உள்ள கடைகளில் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்