search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொம்மிடியில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொம்மிடி வடசந்தையூர் கால்நடை சந்தை இன்று நடந்தது. பொங்கல் பண்டிகைையயொட்டி வார சந்தையில் தரமான மலை ஆடுகளை போட்டி போட்டு பொதுமக்கள், வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

    பொம்மிடியில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • கிராமங்களில் இருந்து ஆடுகள் மாடுகள் பெரும்பாலும் விற்பனைக்கு குவியும்.
    • வியாபாரம் 1 கோடி வரை நடந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடி வட சந்தையூர் கால்நடை சந்தை மிகவும் பிரபலமானது, இந்த சந்தைக்கு வாரம்தோறும் அருகில் உள்ள சேலம் மாவட்ட மலை கிராமங்களில் இருந்து ஆடுகள் மாடுகள் பெரும்பாலும் விற்பனைக்கு குவியும்.

    தற்போது இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட இருப்பதால் இந்த வார வியாழக்கிழமை சந்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

    கரிநாள் பண்டிகைக்கு தேவையான கறி ஆடுகளை இந்த சந்தையில் வாங்குவதற்காக தருமபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்ததால் வார சந்தை களை கட்டியது.

    இந்த சந்தைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலை கிராமத்தை சேர்ந்த அக்கறையூர், பூமரத்தூர், கோவிலூர், எஸ். பாளையம், மோரூர்.கோவிந்தாபுரம், ஜாலி கொட்டாய். மலை கிராமங்களில் இருந்தும், தருமபுரி மாவட்டத்தில் அச்சம்பட்டி, கோம்பை, தண்டா, வே.முத்தம்பட்டி, கொண்ட கர ஹள்ளி போன்ற பகுதிகளில் இருந்து மலை ஆடுகள் விற்பனைக்கு குவிந்தது.

    அதை வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். மலை ஆடுகள் இயற்கை தலை, இலை, கொடி ,செடி சாப்பிட்டு தரமாக உள்ளதால் அவற்றை கறிக்கு வாங்க பொதுமக்கள் வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஒரு ஆடு குறைந்தது ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த சந்தையில் சுமார் ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு வந்துள்ள தாகவும், வியாபாரம் 1 கோடி வரை நடந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×