என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களே உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்-தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் பேச்சு
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
- அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தான் இன்று புகழ்பெற்ற விஞ்ஞானிகளாக உள்ளனர்.
சுரண்டை:
சேர்ந்தமரம் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடந்தது.
புதிய வகுப்பறை
மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போஸ், ஒன்றிய குழு துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமச்சந்திரன், நாடார் மகாஜன சங்க துணை தலைவர் மதன் சுப்பிரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பி ரமணியத்துரை வரவேற்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில், ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் மரக்கன்று நட்டு பேசினார்.அப்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தான் இன்று இஸ்ரோ மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானிகளாகவும், உயரிய பொறுப்புகளிலும் உள்ளனர்.பள்ளி மாணவர்களுக்காக இந்த கட்டிடத்தை கட்டிக் கொடுத்த மனிதநேயமிக்க மாண வர்களை உருவாக்கி யதும் இதே அரசு பள்ளி தான். முதல்-அமைச்சர் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு அமைத்து பள்ளி சிறப்பாக செயல்படும் வகையில் திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். அவருக்கு இந்த நேரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து புதிய கட்டிடத்தை கட்டி கொடுத்த பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமாதேவி, உறுப்பி னர்கள் காசிநாதன், பாக்கிய ராஜ் ,சரஸ்வதி, ஹரிஹரன் ஆகியோர் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் சேர்ந்தமரம் கிளை தி.மு.க. செயலாளர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதி வேச முருகேசன், வீரசிகாமணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிற்றரசு,பிரேம் குமார் உட்பட பொதுமக்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழாசிரியை மதுமதிவதனா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்