என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லறை திருநாளை ஒட்டி தருமபுரியில் கிறிஸ்தவர்கள் தங்களது உறவினர்களின் சமாதியில் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்ட காட்சி.
கல்லறை திருநாள் வழிபாடு
- சிலர் முன்னதாகவே சமாதிக்கு வர்ணம் பூசி மலர்கள் வைத்து அழகு படுத்தி இருந்தனர்.
- சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்தோடு கல்லறைக்குச் சென்று உறவினர்களின் சமாதியை சுத்தம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
தருமபுரி,
உயிர் நீத்த கிறிஸ்தவர்கள் சமாதியில் பூஜை செய்யும் நாளாக ஆண்டுதோறும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற கல்லறை திருவிழா நிகழ்ச்சியில் தருமபுரி நகரப் பகுதி, மற்றும் வெளிப்புறத்தில் இருக்கும் கல்லறைகளில் பிரார்த்தனை செய்வதற்கு கிறிஸ்தவர்கள் காலை முதல் வரத் தொடங்கினர்.
சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்தோடு கல்லறைக்குச் சென்று உறவினர்களின் சமாதியை சுத்தம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
சிலர் முன்னதாகவே சமாதிக்கு வர்ணம் பூசி மலர்கள் வைத்து அழகு படுத்தி இருந்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதை ஒட்டி கல்லறை திருநாளிலும் இடைவிடாது மழை பெய்து வந்தாலும், மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் குடை பிடித்துக் கொண்டு கல்லறைக்கு சென்று மலர் தூவி சிலுவைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏத்தி சாம்பிராணி புகையிட்டு வழிபாடு நடத்தினர்.
உயிர் நீத்தவர்கள் விரும்பி சாப்பிட்ட பலகாரங்களை சமாதி முன் வைத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.






