என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூடலூர் நகர்மன்ற கூட்டம்
Byமாலை மலர்13 Aug 2022 11:06 AM IST
- கூடலூர் நகராட்சி கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
- நகராட்சி சார்பில் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் தலா 50 தேசியக் கொடிகள் வழங்கப்பட்டது.
கூடலூர்:
கூடலூர் நகராட்சி கூட்டம் தலைவர் பத்மாவதி லோகன்துரை தலைமையில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் உட்பட அனைத்து நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தேவர் சிலை மற்றும் இந்து நடுநிலைப் பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பாலம் கட்டுதல், சுல்லக்கரை ஓடையிலிருந்து வடக்கு போலீஸ் நிலையம் வரை மூடியுடன் கூடிய கழிவுநீர் வடிகால் வசதி செய்தல், கருணாநிதி காலனி மற்றும் காந்தி கிராமம் பகுதியில் உள்ள கழிப்பறை கட்டிடங்களை சீரமைப்பு பணி செய்தல் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகராட்சி சார்பில் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் தலா 50 தேசியக் கொடிகள் வழங்கப்பட்டது. கூட்டம் முடிவில் நகராட்சி மேலாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.
Next Story
×